டேன்ஜரஸ் ரோடு... ! ஆனா இந்த ரோட்டை தான் பயன்படுத்தனும் ..! அது என்ன ரோடு?

share on:
Classic

ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வதற்கு பெரும்பாலும் நாம் அனைவரும் சாலை வழி மார்க்கமாகவே பயணிக்கின்றோம்.  அவ்விதம் பயணிக்கும் சாலைகளில் ஆபத்தும், அச்சமும் இருந்தால்...........? ஆம்......... டேன்ஜராஸ் ரோடு... ! ஆனா இந்த ரோட்டை தான் பயன்படுத்தனும் ..! அது என்ன ரோடு? பார்க்கலாம் வாங்க.

யூ.ஈஸ் வழித்தடம் 431:  அலபாமா:  முழு நீளமாக நேர் கோடு போல காட்சியளிக்கிறது இந்த சாலை.  சாலை நேர்கோட்டில் இருப்பதால் இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. சில நேரங்களில் வாகனங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழப்பதாக வாகன ஓட்டிகளே தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இங்கு விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இங்கு விபத்துக்கள் அதிகமாக நடப்பதால் ஐக்கிய நாடுகள் சபை இந்த சாலையை அபாயகரமான சாலை என அறிவித்துள்ளது. 

லெக்சர் அல் ஹூர்காட சாலை : எகிப்தில் உள்ளது. இங்கு "டேன்ஜராஸ் ரோடு" என அழைப்பதன் அர்த்தமே வேறு. காரணம் வழிப்பறி, கொள்ளை, கடத்தல் , என இங்கு பயணிக்கும் மக்களின் பொருட்கள் கடத்தப்படுவதும், வாகனங்களை வழிமறித்து மிரட்டுவதும் என திருடர்களுக்கு பெயர் போன சாலை இது. 

பேபர்ட் டி 915 : துருக்கியின் திரப்ஜோன் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்த சாலை. இது கடல் மட்டத்தில் இருந்து 2,035 மீட்டர் உயரம் உடையது. மிக குறுகலான சாலை என்பதால் சிறிது கண் அசந்தாலும் நொடி பொழுதில் எமன் தரிசனம் பெற்று விட்டு வந்து விடலாம் போலும். மிக மிக ஆபத்தான சாலை இது . 

கோல்டு சவ்ஸி:  இந்த சாலை மிகவும் அபாயகரமானது. மிகவும் வளைந்து நெலிந்து காணப்படும். இங்கு வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். விபத்துக்கள் பெரும்பாலும் இங்கு அதிகமாக நிகழும். இந்த சாலை பிரான்ஸ் நாட்டில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் உள்ளது இந்த சாலை. 1,533 அடி கடல் மட்டத்தில் இருந்து மேலே உள்ளது. 

ஃபுர்கா பாஸ் சாலை: சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ளது இந்த சாலை. சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் உள்ள இந்த சாலை 7,969 அடி நீளம் கொண்டுள்ளது. ஐரோப்பாவின் மிக நீண்ட சாலையில் இதுவும் ஒன்று. இந்த சாலை ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கோல்ட்ஃபிங்கர் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. 

ஹல் சேமா சாலை:  இந்த நெடுஞ்சாலை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளது. டேன்ஜராஸ் ரோடு என இது அழைக்கப்படுவதற்கான காரணம் இங்கு சாலை முழுவதும் வழவழவென காணப்படும். இதனால் இங்கு விபத்துக்களை அதிகம் காண முடியும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu