நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒத்திவைக்க முடிவு?

share on:
Classic

ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா உட்பட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு  தேர்தல் நடப்பதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் 3வது வாரம் வரை நடைபெறும். கடந்தாண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் தாமதமாக தொடங்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டும் தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதியாக நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu