close
முகப்புஉயிரிழந்தோர் உறவினர்களுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள்: குரங்கணி காட்டுத் தீ குறித்து கமல் டுவிட் 

உயிரிழந்தோர் உறவினர்களுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள்: குரங்கணி காட்டுத் தீ குறித்து கமல் டுவிட் 

உயிரிழந்தோர் உறவினர்களுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள்: குரங்கணி காட்டுத் தீ குறித்து கமல் டுவிட் 

குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கிய 17 பேர் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களை போடி அரசு மருத்துவமனையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் உறவினர்களுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள் உயிர் பிழைத்தவர்கள் நலம் பெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.