தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தேதி அறிவிப்பு

Classic

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1ம் தேதி தொடங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சநத்தித்த அவர், சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 5ம் தேதி வரை நடைபெறும், கோயம்பேடு பணிமனையில் 26 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் 2 மையங்கள் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், கோயம்பேடு, தாம்பரம், பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். 

ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

vijay