தாஜ்மஹாலை இடித்துவிடுங்கள் - உச்ச நீதிமன்றம் அதிரடி 

Classic

உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் அரிய பொக்கிஷமான தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.  

இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  உலக அதிசயங்களை பாதுகாக்க பிறநாடுகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

அதே சமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக குறிப்பிட்ட  நீதிபதிகள், தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். 

இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என தெரிவித்தனர்.

News Counter: 
100

sankaravadivu