டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் - பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா

share on:
Classic

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரானது இன்று தொடங்குகிறது. 

சூப்பர் சீரிஸ் அந்தஸ்து பெற்ற பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான டென்மார்க் ஓபன் இன்று தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பாக சிந்து, சாய்னா நேவால் களமிறங்குகின்றனர். ஆடவர் பிரிவில் சாய் ப்ரணீத், சமீர் வெர்மா, நடப்பு சாம்பியனான ஸ்ரீகாந்த் ஆகியோர் களம் காண்கின்றனர். கடந்த ஆண்டு டென்மார்க் தொடரில் பட்டம் வென்று புதிய சாதனை படைத்த ஸ்ரீகாந்த் இந்த முறையும் அதனை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார். இரட்டையர் பிரிவில் மானு அட்ரி, சுமித் ரெட்டி இணையும், அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி இணையும் பங்கேற்றுள்ளன.

News Counter: 
100
Loading...

sankaravadivu