சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 'தாதா 87' ட்ரைலர்..!

share on:
Classic

உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் 80-களில் வெளியான பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்போது, ‘தாதா 87’ என்ற படத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சாருஹாசன் தாதாவாக வலம் வரவுள்ளாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும், கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி இயக்கியுள்ளார். லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ள இதற்கு ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதனை ‘கலை சினிமா’ நிறுவனம் சார்பில் எம்.கலைச்செல்வன் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், படத்தின் டிரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா வெளியிட்ட இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh