’ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான தமிழக பெண்..

share on:
Classic

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமானது ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவானாக திகழ்கிறது. Chevrolet, Buick, GMC, Cadillac, Holden, HSV, Wuling, Baojun, Jie Fang மற்றும் Ravon  உள்ளிட்ட மொத்தம் 10 பிராண்டுகளின் கீழ், 37 நாடுகளில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆட்டோமொபைல் படைப்புகளை விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் மூலம் 96,00,000 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, 145 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. 

இந்நிறுவனத்தின் கடைநிலை ஊழியராகும் வாய்ப்பாவது கிடைக்காதா என இந்தியர்கள் பலர் ஏங்கி வவரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண்ணுக்கு தலைமை பொறுப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதித்துறை துணைத்தலைவராக கடந்த 11 மாதங்களாக  திவ்யா பணியாற்றி வருவதாகவும், இவரது திறமையை அடையாளப்படுத்தும் விதமாக  CFO எனப்படும் தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை நிதி அதிகாரியாக செயல்படும் ஸ்டீவன்ஸின் பதவிக்காலம் முடிவடைந்ததும், அந்த பதவியை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று திவ்யா ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட திவ்யா, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வணிக பாடப்பிரிவிற்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். இதன்பின்னர், அமெரிக்காவில் உள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்று அங்கேயே பணிபுரியத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து தமது  39 வயதில் திவ்யா தற்போது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். உலக ஆட்டோமொபைல் துறையிலேயே தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள முதலாவது பெண் என்ற பெருமை திவ்யாவின் வசம் சென்றுள்ளது. மேலும், ஜெனரல் மோட்டார்ஸின் இப்போதைய பெண் தலைமை செயலதிகாரி பராவுடன் (Barra) இணைந்து இவர் பணியாற்றவுள்ளார். இரண்டு பெண் தலைமைக் கொண்டு செயல்படவுள்ள,  உலகின் முதலாவது ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற பெயரை ஜெனரல் மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh