குட்டீஸ்க்கு தீபாவளி டிரெஸ் வாங்குங்க... ஆனா முதல்ல இதப்படிங்க !

share on:
Classic

என்ன குட்டீஸ்  தீபாவளிக்கு டிரஸ் எடுக்க தயாரா ? டிரஸ் வாங்குறதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கிற பெரியவங்க கிட்ட நீங்களே இதெல்லாம் இருக்கானு கவனிக்க சொல்லுங்க. 

குழந்தைகளுக்கு உடை வாங்கும் பொழுது துணியின் குவாலிட்டி மிக முக்கியம். மொறுமொறுப்பான காட்டன் துணிகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிக்காத ஒன்று. 

ஒரு நாள் பண்டிகை என எண்ணி அவர்களின் விருப்பம் போல் வாங்காமல் சிலர் அதிக ஒர்க் வைத்த ஆடைகளை வாங்குவர். பெரும்பாலும் குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த துணிகளேயே அதிகம் போட்டுக்கொள்ள ஆசைப்படுவர்.  ஆகவே ஆடை விஷயத்தில் பெரும்பாலும் அவர்களின் போக்கு போல் போனால் நல்லது. 

ஆடை வாங்கும் பொழுது, பெரிதாக வாங்கினால் வைத்து போடலாம் என்ன எண்ணாதீர்கள்.அவர்கள் அசவுகரியமாக உணருவார்கள்.அவர்களின் தேவைக்கேற்ற சரியான அளவிலேயே வாங்குங்கள்.

குழந்தைகளை கடைக்கு உடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த விருப்பமான கலர் டிரஸை தேர்வு செய்ய சொல்லுங்கள். தீபாவளி என்றால் குழந்தைகள் பட்டாசு வெடிப்பது வழக்கம். அவற்றுக்கேத்தார் போல் சௌகரியமாக வாங்குங்கள். 

பெரும்பாலும் மிருதுவான ஆடைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள். அவையே குழந்தைகள் பெரும்பாலும் விரும்பக்கூடியது . 

News Counter: 
100
Loading...

sankaravadivu