செம்பருத்தி பூவின்  மகத்துவம் தெரியுமா.... தெரிஞ்சுக்கோங்க !

share on:
Classic

செம்பருத்தியின் இலை, பூ, வேர் என அனைத்துமே பலன்தான். எனினும் செம்பருத்தி பூவில் உள்ள சில அறிய மருத்துவ குணங்கள் குறித்து இதில் காண்போம். 

மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

செம்பருத்தி பூவை கொதிக்கும் நீரில் போட்டு நீரை வடிகட்டி ஒரு டம்ளர் நீரில் 1/2 வீதம் காய்ச்சி கொள்ள வேண்டும். அதனை பருகி வர பெண்களின் மாதவிடாய் பிரச்சனை தீரும். 

வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சரிசெய்ய செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டு வர நல்ல பலன் தரும். கொதிநீரில் போட்டு வடிகட்டியும் அருந்தலாம். 

தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

புழுவெட்டை சரிசெய்ய செம்பருத்தி பூவின் இதழோடு வரிக்கமட்டி காயையும் அரைத்து பூச சரியாகும்

News Counter: 
100
Loading...

sankaravadivu