இருமடங்காகும் விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய சம்பளம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇருமடங்காகும் விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய சம்பளம்

இருமடங்காகும் விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய சம்பளம்

February 10, 2018 127Views
இருமடங்காகும் விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய சம்பளம்

பதக்கங்கள் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதேபோல் பாராலிம்பிக் வீரர்களின் ஓய்வூதியமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு துறைக்காக கடந்த சில ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு வரும் நிதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அந்த மாநிலங்களில் இருந்து பல்வேறு சாம்பியன்கள் உருவாகி வருகின்றனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் விளையாட்டை மேம்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு நிதியாக 200 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.