பாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புபாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது

பாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது

February 11, 2018 222Views
பாரிஸ் நகரின் அடையாளமான ஈபிள் டவர் மூடப்பட்டது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காணப்படும் அதிகப்படியான பனிப் பொழிவு காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இதை பார்வையிட ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர். இந்தநிலையில் பாரீஸ் நகரின் அடையாளமாக திகழும் ஈபிள் டவர் கடந்த 6 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. நாளை வரை இது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பாரீஸில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த 1887 ஆம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 12 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஈபிள் டவர் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் காணப்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக பாரீஸில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல், நகரம் முழுவதும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடரும் பனி மழை காரணமாக மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பனிப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் பனிபொழிவையும் பாரிஸில் குவிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.