close
முகப்புமின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமா! மொத ஃபோன ஜார்ஜ் போடனும்...

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமா! மொத ஃபோன ஜார்ஜ் போடனும்...

February 15, 2018 352Views
மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமா! மொத ஃபோன ஜார்ஜ் போடனும்...

மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதியஉயர்வு, பணிச்சுமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்க் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்வாரிய அலுவலங்களில் பணம் செலுத்தும் கவுன்டர்கள் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் அச்சம் மக்களிடையே நிலவி உள்ளது.

தற்போது தான் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு மக்களை மீண்டும் பீதியல் ஆழ்த்தியுள்ளது. 

அவங்க வேலைநிறுத்தப் போராட்டம் செய்தால் ஊருக்கு தான் போக முடியாது ஆனா இவங்க வேலைநிறுத்தப் போராட்டம் செய்தால் ஊருக்குள்ள இருக்கவே முடியாது என்று பொதுமக்கள் புலம்பி தீர்த்துள்ளனர்.