கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

share on:
Classic

கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 18-ம் தேதி பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.  தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியுள்ளதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  350 மெகாவாட்டாக உள்ள மின் உற்பத்தி, இன்னும் சில தினங்களில் 1000 மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 
 

News Counter: 
100
Loading...

aravind