கால்பந்து சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யானைகளுக்கு போட்டி

Classic

உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யானைகள் கால்பந்து விளையாடிய வித்தியாசமான போட்டி நடைபெற்றது.

21வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் வரும் 14ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் கால்பந்து போட்டியில் சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யானைகள் கால்பந்து விளையாடிய வித்தியாசமான போட்டி நடைபெற்றது.

முதலில் ஒவ்வொரு யானை மீதும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கொடிகள் வரையப்பட்டன. அத்துடன் வீரர்களின் ஜெர்சியில் இருப்பதுபோல், அனைத்து யானைகளுக்கும் பிரத்யேகமான நம்பர்களும் வரையப்பட்டன.

அர்ஜெண்டினா, ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாட்டின் கொடிகள் வரையப்பட்டன. பின்னர், யானைகள் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதன்பின், போட்டி ஆரம்பம் ஆனது. யானைகள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் விளையாடின.

இந்த போட்டியில் யானைகளுடன், இளம் வீரர்களும் கலந்துகொண்டு உற்சாகமாக கால்பந்து விளையாடினர்.

News Counter: 
100

Parkavi