விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி 

share on:
Classic

அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதையடுத்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind