கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்..!

கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்..!

கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்..!

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியில் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பெருஞ்சாணி அருகே வேக்கானி மூடு பகுதியில் உள்ள பழ தோட்டத்தில் ஜெபமணி என்ற விவசாயி பழ தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது புதர்களுக்கு மறைந்திருந்த கரடி ஒன்று விவசாயி ஜெபமணியை கொடூரமாக தாக்கியது. 

இதில் அவரது முகம், கால் பகுதி முழுவதும் படுகாயமடைந்தது. ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .