மறைந்த கருணாநிதிக்கு திரை உலகத்தினர் நடத்தும் நினைவேந்தல்..!

Classic

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 13 ஆம் தேதி மாலை திரையுலகத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி காலமானார். இந்நிலையில், வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக இருந்து திரைப்படத்துறையில் பல சாதனைகள் செய்திருக்கும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திரையுலகத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என திரையுலகமே திரண்டு நடத்தும் இந்த நிகழ்ச்சி வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100

aravindh