மீன்பிடி தடைகாலம் நிறைவு..கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் மீனவர்கள்..

Classic

மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவடைவதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் இருந்தது. இதனால் 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவடைவதால்,  ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News Counter: 
100

aravindh