இலங்கை வசம் சிக்கியுள்ள படகுகளை மீட்க கோரிக்கை

share on:
Classic

இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக,புதுவை மீனவர்களின் 162 விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் நாகை ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வருகின்ற 14-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக, புதுவை மீனவர்களின் 162 படகுகளை மீட்க வலியுறுத்தி அக்கரைபேட்டை பஞ்சாயத்தார் தலைமையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 2014-ம் ஆண்டு முதல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக, புதுவை மீனவர்களின் 162 விசைப்படகுகளையும் மீட்டு தாயகம் கொண்டு வரும்படி கோரிக்கை வைத்தனர். மேலும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவித்து, இருநாட்டிற்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடத்தவும்,  மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravindh