மேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை, காவிரி நீர், கர்நாடகா, Mettur Dam, Cauvery Water, Karnataka
Classic

மேட்டூர் அணையின் கரையோர கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு,  வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அசுரவேகத்தில் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, தண்டோரா மூலம்  வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் கோட்டாட்சியர் பண்ணவாடி பரிசல்துறை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டார், அதன் அடிப்படையில் பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வந்து போவதால் அப்பகுதியில்  வருவாய் துறையினரை தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

News Counter: 
100

aravindh