மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Classic

மதுரை விமான நிலையத்தில் பதினேழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகளில் 5 பேர் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரிடம் மதுரை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

News Counter: 
100
Loading...

aravindh