close
முகப்புதீபிகா படுகோனின் தலையை அடுத்து அவரின் மூக்கிற்கு விலை நிர்ணயம்

தீபிகா படுகோனின் தலையை அடுத்து அவரின் மூக்கிற்கு விலை நிர்ணயம்

January 25, 2018 238Views
தீபிகா படுகோனின் தலையை அடுத்து அவரின் மூக்கிற்கு விலை நிர்ணயம்

பத்மாவத் படத்தின் நாயகி தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டினால் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்படும் என கான்பூர் சத்ரிய மகாசபை அறிவித்துள்ளது.

தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்து இன்று நாடு முழுவதும் வெளியாகி பத்மாவத் படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புடன் போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்தநிலையில், கான்பூர் சத்ரிய மகாசபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை யார் வெட்டி எடுத்து வந்து தங்களிடம் கொடுப்பவர்களுக்கு கோடிக் கணக்கில் பணத்தை தருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.