இன்பாக்ஸ் சேவை நிறுத்தமா? அதென்ன இன்பாக்ஸ்?

share on:
Classic

கூகுளால் 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்பாக்ஸ் செயலி புதிய மின்னஞ்சல் செயலியாக இருந்து வந்தது. இதில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு, பின் அவை ஜிமெயிலில் வழங்கப்பட்டது. கூகுளை பொருத்தவரை சோதனை தளமாக செயல்பட்டு வருகிறது. 

 

 

 

 

Size 17MB

Downloads 10M+

Rating 4.2 

 

 

 

 

 

இன்பாக்ஸ் செயலியில் மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், நட்ஜஸ், மிகமுக்கிய நோட்டிஃபிகேஷன்கள், ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டது. 

 

கூகுள் இன்பாக்ஸ் செயலியை மார்ச் 2019 வாக்கில் நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

• HIGHLIGHTS - முக்கிய அறிவிப்புகளை எடுத்துக்காட்டுவது அதாவது டிக்கெட்டுகள், ஆன்லைன் புக்கிங்குகள் முதலியவைகளை

 

• BUNDLES - ஒத்த மெயில்களை ஒன்றாக குரூப் செய்து காட்டுவது

 

• REMINDERS - செய்யும் செயல்களை குறித்து வைத்து நியாபகப்படுத்தும் வசதி

 

• SNOOZE - குறிப்பிட்ட மெயில்களை குறிப்பிட்ட நேரத்தில் நியாபகப்படுத்தும் அலாரம் வசதிகளைக் கொண்டது

 

அனைவருக்கும் சிறப்பான மின்னஞ்சல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேலும் சிறப்பான அணுகுமுறையை கையாள வேண்டும். இதனால், ஜிமெயிலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, இன்பாக்ஸ் சேவையை மார்ச் 2019-க்குள் நிறுத்த இருக்கிறோம் என கூகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

sasikanth