துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - விஜயகாந்த்

share on:
Classic

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய்  ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்பதவியில் இருப்பவர்களே ஊழல் புகார்களுக்கு ஆளாகும் நிலை இன்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநரே தன்னிலை விளக்கமாக துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளது வேலியே பயிரை மேய்வதற்கு சமமாக மக்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துணை வேந்தர்களை  நியமனம் செய்வது கல்வி தகுதியின் அடிப்படையிலா ?  பணத்தின் அடிப்படையிலா ? என்பதை சிந்திக்க செய்துள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மத்திய  அரசும், தமிழக ஆளுநரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள விஜயகாந்த், ஊழல் நடைபெறாமல் இருப்பதை தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth