close
முகப்புசிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹாசினி எனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.  

ஜாமீனில் வெளி வந்த அவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதனை அடுத்து தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்தனர் தமிழக காவல்துறையினர், பின்னர் மும்பையில் அவரை கைது செய்‌தனர். 

சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்று இன்று மதியம் 3 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.

இன்று காலை 11 மணியளவில் குற்றவாளி தஸ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார், அதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நீதிமன்ற விசாரணை நடக்கும் அறையினுள் வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என சிறுமி ஹாசினியின் பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.