close
முகப்பு சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு

 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 7-வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கான தண்டனை விபரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர், இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, பிறகு ரத்து செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் தற்போது அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

போக்சோ சட்டம் 6,7,8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.  

மேலும், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிறுபனம் ஆகி உள்ளது. 30 சாட்சிகள், 45 ஆவனங்கள், சி.சி.டி.வி. உள்ளிடட 19 சான்றுகள் அடிப்படையில் குற்றங்கள் நிரூபணம் ஆகி உள்ளன.

தஷ்வந்திற்கு மரண தண்டனையா ? தூக்கு தண்டனையா ?  நெட்டிசன்கள்  கருத்து 

கடத்தல், உடலுறவுக்காக கடத்துதல்,பெண்னை மானபங்கம் படுத்துதல், சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் உறுதி செய்யபட்டு தண்டணை விவரங்கள் ஒத்திவைக்கபட்டுள்ளது.

பாக்சோ சட்டம்,குற்றத்தை மறைத்தல், பாலியல் வன் கொடுமை,கொலை ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்கப் பட உள்ளன.

தஷ்வந்த் தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தஷ்வந்திற்கு மரண தண்டனையா ? தூக்கு தண்டனையா ?  என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலரின் கருத்துக்கள்