ராஜஸ்தானை புரட்டிப்போட்டுள்ள கனமழை

Classic

கனமழை காரணமாக ராஜஸ்தான் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் 42 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக மாநிலத்தின் மேற்குப்பகுதிகளில் மழையும், கிழக்குப் பகுதிகளில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனொரு பகுதியாக,  ஜலாலாவாரில் பெய்து வரும் கனமழையால் நகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளிகள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. 

வாகனங்கள் நீரில் மூழ்கி மிதக்கும் காட்சிகளையும் ராஜஸ்தானில் காண முடிகிறது. பரன் (Baran) மாவட்டத்தில்  அதிகபட்சமாக 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெய்ப்பூர், அல்வார், சிக்கார் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான மழை பொழிந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மீட்புப்பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

 

News Point One: 
ராஜஸ்தானை புரட்டிப்போட்டுள்ள கனமழை
News Point Two: 
கனமழை காரணமாக ராஜஸ்தான் வெள்ளத்தில் மிதக்கும் நிலை
News Point Three: 
மேற்குப்பகுதிகளில் மழையும், கிழக்குப் பகுதிகளில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது
News Counter: 
100
Loading...

aravindh