close
முகப்புதீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி மையம்

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி மையம்

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி மையம்

குரங்கணி மலைப் பகுதி குறித்து போடி அரசு மருத்துவமனை மற்றும் குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் BSNL சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டபோது 40-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மனவேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் மேலும் மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.