உயர்கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் 

share on:
Classic

உயர்கல்வியில் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை பல்கலைக் கழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.  

சென்னை பல்கலைகழகத்தின் 161 வது பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு மொத்தமாக 70 ஆயிரத்து 430 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வியில் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கபட்டுள்ளதால் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், சென்னை பல்கலைகழகத்தின் அனைத்து பட்டங்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதால் , பட்டபடிப்பு சான்றிதழை எந்நேரத்திலும்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu