தகுதியானது  நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் 

share on:
Classic

தகுதியானது  நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 11-வது  பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், 2017-18-ம்  ஆண்டுகளில் 8 அரசு கல்லூரிகள் உட்பட 76 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் திறந்த நிலை பல்கலைக்கழகம் என்ற பெருமையை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் பெறுகிறது 

2017-18 ம் ஆண்டில் மட்டும் சுமார் 9 லட்சத்து 952 மாணவர்கள் தொலை நிலைக்கல்வி வாயிலாகக் கல்வி பெற்று வருகின்றனர். இந்திய அளவில் உள்ள 903 பல்கலைக்கழகங்களில் NIRF தரவரிசை பட்டியலில், முதல் 50 இடங்களை பெற்றவைகளிலிருந்து, 20 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து மேம்பட்ட உயர்கல்வி நிறுவனம் என தகுதி வழங்கி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ரூபாய் 1000 கோடி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். 

மேலும், இந்திய அளவில் இந்த ஆண்டும் ஆராய்ச்சி படிப்பில் தமிழகம் தான் உயர்வான இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை தகுதி பெற்று விண்ணப்பித்துள்ளன. உயர்கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கையில் தமிழகம்  இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழ்நாட்டில் 48.6% ஆண்கள், பெண்கள் 48.2%, தாழ்த்தப்பட்ட மாணாக்கர் 42.1% மற்றும் பழங்குடி மாணாக்கர்கள் 40.5% பேர் உயர்கல்வி பயில்கிறார்கள் எனத் தெரிவித்தார். மேலும் இந்திய அளவில் இந்த ஆண்டும் ஆராய்ச்சி படிப்பில் தமிழகம் தான் உயர்வான இடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu