விடுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... காவலாளிக்கு சிறை..!  

share on:
Video

சோழிங்கநல்லூரில்  ஐ.டி நிறுவன பெண் ஊழியரை பாலியல் தொந்தரவு  செய்ய முயன்ற விடுதி காவலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்துள்ள ஈ.சி.ஆர் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் 2-வது மாடியில் கோவை சேர்ந்த பெண் ஒருவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில்  அப்பெண்ணின் அறைக்குள் புகுந்த விடுதியின் காவலாளி சுபாஷ் அப்பெண்னை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவலாளி சுபாஷ் தப்பியோடியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்ததன் பேரில் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravindh