மனைவிக்கு சிலை வைத்த கணவர்...மறைந்தாலும் மறையாத அழியாக் காதல்..!

share on:
Video

தொடர்ந்து சேட் (Chat)  செய்யாவிட்டால் பிரேக்- அப்(Break up), மெசேஜ் அனுப்பாததற்கு பிரேக் அப் (Break up), என்று உலவும் இளசுகளின் மத்தியில், உயிரிழந்த தன் மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் ஆசைத்தம்பி என்பவரின் உண்மைக்கதை நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. மளிகைக் கடை மற்றும் கேபிள் டிவி வைத்து நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆசைத்தம்பி, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பிராட்டி என்பவரை விரும்பி மணந்திருக்கிறார்.

எளிமையாக வாழ்ந்த தம்பதிகள் இருவரின் அன்புக்குப் பரிசாக, 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், காலம் செய்த சூழ்ச்சியால் பெரிய பிராட்டியை புற்றுநோய் ஆட்கொண்டு, உயிரைப் பறித்துக் கொண்டு சென்றது. மனைவி மீது வைத்த உண்மைக் காதலின் காரணமாக,ஆசைத்தம்பி மனைவி பெரியபிராட்டி, இறந்து 10 மாதங்கள் கழித்து சிலை அமைத்து, தனது வீட்டில் நிறுவியிருக்கிறார்.
  
அடிப்படையில் வறுமையில் இருந்த ஆசைத்தம்பி, திருமணத்திற்குப்பின் தனது மனைவி பெரியபிராட்டியின் ஆலோசனைப்படி அனைத்து விதமான தொழில்களிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். அந்த அன்பிற்காக சிலை வைத்த ஆசைத்தம்பி, ஒரு படி மேலே சென்று, தன் மனைவியின் சிலைக்கு தினமும் உணவு படைத்து வழிபாடு செய்து வருகிறார். 

செல்ஃபி..... எடுக்கையில் மட்டும் நெருக்கம் காட்டி வாழ்ந்து, திடீரென உறவை முறித்துக்கொள்ளும் தம்பதிகள் மத்தியில், வாழ்ந்து மறைந்து பின்னரும் சிலை வைத்து வழிபாடு செய்யும் ஆசைத்தம்பி போன்றவர்கள் உண்மையில் வாழ்க்கை வழிகாட்டிகள்! நினைவு கூர்ந்து போற்றப்பட வேண்டியவர்கள்!

 

News Counter: 
100
Loading...

aravindh