close
முகப்புநான் முழுநேர அரசியல்வாதி இல்லை, கமலுக்கு ரஜினி பதிலடி

நான் முழுநேர அரசியல்வாதி இல்லை, கமலுக்கு ரஜினி பதிலடி

நான் முழுநேர அரசியல்வாதி இல்லை, கமலுக்கு ரஜினி பதிலடி

தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

 இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த், டேராடூனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினி அரசியல் பேசுவதில்லை என கமல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரஜினி காந்த் தான் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். காரணம் இன்னும் தான் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்றும் அரசியல் கட்சி கூட தொடங்கவில்லை என்றார். தேனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைந்துள்ளதாகவும், அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.