வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புவெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா...

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா...

February 12, 2018 170Views
வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி கிட்டுமா...

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு பணம் முதலீடு செய்ய உதவியதாக எழுந்த புகாரையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராகாததால் கார்த்தி  சிதம்பரத்தை சிபிஐ 'தேடப்படும் நபராக' அறிவித்து  "லுக் அவுட்" நோட்டிஸ் வெளியிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.