ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்பவர்களே, உங்கள் பணம் உண்மையில் பாதுகாப்பாக உள்ளதா? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்பவர்களே, உங்கள் பணம் உண்மையில் பாதுகாப்பாக உள்ளதா?

ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்பவர்களே, உங்கள் பணம் உண்மையில் பாதுகாப்பாக உள்ளதா?

February 09, 2018 332Views
ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்பவர்களே, உங்கள் பணம் உண்மையில் பாதுகாப்பாக உள்ளதா?

மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டும் வங்கியாக செயல்பட்டு வருகின்றது. மேலும், அதற்கென தனி இணையத்தளம் ஒன்று உள்ளது.  

இந்தநிலையில், ரிசர்வ் வங்கி இணையத்தளம் போன்றே போலியான இணையத்தளம் ஒன்று  உருவாக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது போலியான இணையத்தளம் என்றும், அதை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

மேலும், வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் உள்ளீடு செய்யும் போது, அவர்களிடம் பண மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், எப்போதும் ரிசர்வ் வங்கி பொதுமக்களில் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிறுத்தியுள்ளது.