இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே எரிமலை 'பாரன்'

share on:
சுற்றுலா, பாரன், எரிமலை, Travel, Barren, Volcano
Classic

இந்த பிரபஞ்சத்தில் வேறு இங்கும் இல்லாத அதிசியம் பூமியில் இருக்கிறது என்றால் அது இயற்கை. இயற்கையின் பெரும் அதிசியங்களை கண்டு இன்னும் நாம் வியந்து கொண்டு தான் இருக்கிறோம். நடுங்க வைக்கும் குளிர், உறைய வைக்கும் பனி, வாட்டி வதைக்கும் வெயில், ரசிக்க வைக்கும் மழை என்று இயற்கை அதிசியங்களை அடுக்கி வைத்து கொண்டே போகலாம்.

இந்த இயற்கை ரசிக்க மனிதர்களுக்கு இரு கண்கள் போதது என்றே சொல்லாம். ஆனால் இயற்கை ரசிக்க வைக்க மட்டுமல்ல நடுங்க வைக்கவும் செய்யும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் எரிமலை. இந்த எரிமலை வெடிக்காத வைக்கும் நாம் அமைதியாகாவும் அதன் அருகில் இருக்கவும், ஆனால் அடுத்து வெடித்து அதன் ரூத்ரதாண்டவம் ஆரம்பித்தால் அவ்வளவு தான். 

நம்மில் பலர் எரிமலை என்றாலே அவை வெளிநாடுகளில் தான் உள்ளது என்று நினைத்தீர்பர்கள். ஆனால் நம் இந்தியாவிலேயே ஒரு எரிமலை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்றால் அதை உங்களால் நம்ப முடியுமா? இருக்கிறது, அது தான் பாரன் எரிமலை. 

எரிமலை என்றால் என்ன?

பூமியின் உட்புறத்திலுள்ள மிகவும் வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கிறோம். வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உண்டாகின்றன. அதிலிருந்து உமிழப்படும் எரிமலைக் குழம்பு 'மாக்மா' எனப்படும். எரிமலையை ஆங்கிலத்தில் 'வால்கனோ' என அழைப்பர். இந்த சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. ரோமானிய அக்னி கடவுளுக்கு 'வால்கன்' என்று பெயர். இதிலிருந்துதான் 'வால்கனோ' என்ற சொல் வந்தது. எரிமலைகள் குறித்து ஆய்வு செய்யும் படிப்புக்கு 'வால்கனோலஜி' என்று பெயர். 

உலகின் பெரிய எரிமலை:

உலகில் இதுவரை பதிவான எரிமலை வெடிப்புகளில் பெரியது இந்தோனேசியாவின் சம்பவா தீவில் உள்ள தம்போரா எரிமலை. இது 1815ம் ஆண்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட புகை காரணமாக சுற்றுப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த எரிமலை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

பாரன் எரிமலை:

இந்தியாவன் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள பாரன் தீவில் உள்ள இந்த எரிமலை முதன்முதலாக 1787ல் வெடித்தது. பின் 1789, 1795, 1803 மற்றும் 1852ம் ஆண்டுகளில் எரிமலை வெடிப்பு பதிவாகியுள்ளது. இதற்கு பின் 150 ஆண்டுகளாக இந்த எரிமலை அமைதியாக இருந்தது. பின் திடீரென கடந்த 1991-ல் வெடித்தது அப்போது புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிட்டது. 

 

இதன் பின் 1994 -- -95ல் மீண்டும் வெடித்தது. அதன்பிறகு இந்த பெரிய அளவில் எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டதில்லை. 2005ல் இந்த எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அது 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் ஏற்பட்டது எனக் கண்டறியப்பட்டது. 

பாரன் தீவு எரிமலையானது அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து வட கிழக்கில் 140 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு மக்கள் யாரும் வசிப்பதில்லை. இங்கு செல்ல வேண்டும் எனில், போர்ட் பிளேரில் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதிக வருவாய் தரும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இது உள்ளது. 

News Counter: 
100
Loading...

vijay