தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா?

February 12, 2018 588Views
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா?

இந்தியா- தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளிக்கு இடையே 5வது ஒருநாள் போட்டியானது நாளை(பிப்.13) இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு எலிசெபெத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் என்பதால், தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர். இந்திய அணி இதுவரை தென்னாப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற்தில்லை. அந்த பெயருக்கும் இந்திய வீரர்கள் முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கின்றனர்.

நாளைய போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றால் தோல்வியிலிருந்து மீளும் என்பதால் சொந்த மண்ணில் தோல்வி முகத்தை தவிர்க்க தென்னாப்ரிக்க வீரர்கள் போராடுவர்கள் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.