தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான  5வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான  5வது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது . 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில், 5வது ஒருநாள் போட்டி , போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக ரோஹித் சர்மா 115 ரன்களும், கேப்டன் விராத் கோலி 36 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இறுதியாக அந்த அணி, 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஹாசிம் அம்லா அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது.