close
முகப்புசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் 5-வது இடத்திற்கான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. 

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் 5-வது இடத்திற்கான போட்டியில் இந்தியா, அயர்லாந்துடன் மோதியது. போட்டியின் 5-வது நிமிட பெனால்டி கார்னரை பயன்படுத்தி இந்தியாவின் வருண் குமார் கோல் அடித்தார்.

 பின், 28-வது நிமிடத்தில் லக்ரா ஃபீல்டு கோல் அடித்தார். அடுத்து 32-வது நிமிடத்தில் வருண் குமாரும், 37-வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங்-ம் கோல் அடித்தனர். அடுத்து, 48-வது நிமிடத்தில் அயர்லாந்து தரப்பில் ஜூலியன் கோல் அடித்தார். 

முடிவில், 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 5-வது இடம் பிடித்தது ஆட்டநாயகனாக இந்திய வீரர் வருண் குமார் தேர்வு செய்யப்பட்டார்.