தமிழகம்,புதுவையில் மழைக்கு வாய்ப்பு...மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Classic

தென்கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுவையில்  இருக்கும் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதில்  பேசிய அவர் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் தென்கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேப்போன்று  தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளதால் கோவை, வால்பாறை, நீலகிரி, தேனியில் மழை பெய்து வருவதாகவும், ஜூலை 1 முதல் ஜூலை 11 வரையிலான காலத்தில் இயல்பை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்ததாகவும்  அவர் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravindh