கட்சி ஆராம்பிக்க போவதாக மிரட்டும் ‘ஜூலி’

Classic

கமல் , ரஜினி மட்டும் தான் அரசியலுக்கு வரவேண்டுமா , நானும் கட்சி ஆரம்பிக்க போகிறேன் எனக் கூறி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த ஜூலியானா, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானார். அதன்பிறகு,  கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் விமர்சனத்திற்குள்ளானர் ஜூலி. சமூக வலைத்தளங்களில் இவரை விமர்சித்த அளவுக்கு ஆதரவும் பெருகியது. இதன்மூலம் பிரபலமான ஜூலி தற்போது கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் , ரஜினி அரசியலுக்கு வருவாரா , வர மாட்டாரா ... கமல் ஆட்சியை பிடிப்பாரா ..மாட்டாரா ? மக்களுக்கு யார் நல்லது செய்வார், நானும் கட்சி தொடங்கவுள்ளேன். விரைவில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். 

News Counter: 
265

Parkavi