அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் : முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ்

Classic

அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என எஃப்.பி.ஐ முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி  விமர்சித்துள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா தான் காரணம் என்றும், ரஷ்ய ஹாக்கர்களின் உதவியின் மூலமாக டிரம்ப் வெற்றியை வசப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து,  எஃப்.பி.ஐ அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை நடந்துகொண்டிக்கும் போதே எஃப்.பி.ஐ இயக்குனர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டார். இதனால், டிரம்ப் மற்றும் கோமி இடையே பகிரங்கமாகவே வார்த்தைப் போர் நடந்தது.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள கோமி, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம்  மற்றும் டிரம்ப்புடனான பழக்கம் குறித்து விளக்கினார். 

தொடர்ந்து பேசிய கோமி, டிரம்ப்பின் நிர்வாகம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அமெரிக்க அதிபராக இருப்பதற்கான தகுதி டிரம்ப்பிற்கு கிடையாது என்றும் அவர் பகிரங்கமாக கூறினார். 

இதனிடையே, காமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர் காமி என்றும், அவர் திறமையான நபர் கிடையாது எனவும், எஃப்.பி.ஐ வரலாற்றில் மிகவும் மோசமான இயக்குனராக காமி திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, டிரம்ப்பிற்கு எதிராக கிட்டத்தட்ட 22 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மேலும், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியலுடன் டிரம்ப் நீண்ட காலமாக தகாத உறவு வைத்திருந்ததாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின்,  டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனின் மன்ஹாட்டன் அலுவலகத்தில், ஆயுதம் ஏந்திய எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், டிரம்ப்பின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக சில கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

News Point One: 
டிரம்ப் தகுதியற்றவர்: எஃப்.பி.ஐ முன்னாள் இயக்குனர்
News Point Two: 
டிரம்ப்பின் நிர்வாகம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்
News Point Three: 
நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர் காமி : ட்ரம்ப்
News Counter: 
200

Parkavi