close
முகப்புஜெயலலிதா மரண விசாரணை : சசிகலாவிடம் நேரில் விசாரணை நடக்குமா?

ஜெயலலிதா மரண விசாரணை : சசிகலாவிடம் நேரில் விசாரணை நடக்குமா?

January 30, 2018 295Views
ஜெயலலிதா மரண விசாரணை : சசிகலாவிடம் நேரில் விசாரணை நடக்குமா?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று உத்தரவிடும் என தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில், இதுதொடர்பாக ஆணையம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இது, சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்துவதற்கான உத்தரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளார். 

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த போது அவரின் மூன்றாம் நிலை செயலராக வெங்கட்ரமணன் இருந்தார். 2012ஆம் ஆண்டு வெங்கட்ரமணனின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா அவருக்கு மேலும் 5 அண்டுகள் பதவி நீட்டிப்பு அளித்தார். 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெங்கட்ரமணன் ஓய்வு பெற்றார்.