close
முகப்புஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனைத்து தரப்புகளையும் விசாரணை செய்து வருகின்றது. 

இந்தக் குழு ஜெயலலிதா மரணம் குறித்து  சிகிச்சை அளித்த மருத்துவர்கள், போயஸ் தோட்ட வேலையாட்கள், சம்மந்தப்பட்ட உறவினர்கள் என அனைவரையும் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனக்கு தெரிந்த விவரங்களை பிரமாண பத்திரமாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். 

அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இதுவரையில் 5 முறை அவகாசம் கேட்ட பின்னர் பல்வேறு சிக்கல்களை கடந்து சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனின் உதவி வழக்கறிஞர் அரவிந்தன் பேட்டியளித்தார். அவர் தெரிவிக்கையில், 

சசிகலாவை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல முறை சிறைச்சாலையில் சந்தித்து பேசிய பின் தயாரிக்கப்பட்ட பிராமாண வாக்குமூலத்தை ஆறுமுகசாமி விசாரணை  தாக்கல் செய்துள்ளோம்.

 உரையிடப்பட்ட கவரில் கொடுக்கப்பட்டதால் அதில் உள்ள விபரங்கள் தெரியாது. மேலும் இனி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.