இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் மோசமான சாதனை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube Rahul Becomes First Indian To Be Dismissed Hit Wicket In T20Is
close
முகப்புஇலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் மோசமான சாதனை

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் மோசமான சாதனை

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் மோசமான சாதனை

சர்வதேச டி20 போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

கொழும்புவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 போட்டி ஒன்றில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின்போது, இந்திய வீரர் கே.எல்.ராகுல் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். ரி‌ஷப் பாண்டுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அவர், மென்டீஸ் வீரர் வீசிய 10வது ஓவரில் பந்தை பின்பக்கமாக வந்து அடிக்க முயன்றார். அப்போது அவரது கால் ஸ்டம்பில் பட்டதால் ‘ஹிட்’ விக்கெட்டானார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் ‘ஹிட்’ விக்கெட்டான 10-வது வீரர் கே.எல்.ராகுல் ஆவார். தென்னாஃப்ரிக்காவின் டி வில்லியர்ஸ், பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக், முகமது ஹபீஸ், இலங்கையின் சண்டிமால் உள்ளிட்ட 9 வீரர்கள் இதற்குமுன் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.