close
முகப்புநயன்தாராவிற்கு நெருக்கடி கொடுக்கும் அமலா பால்... சப்போர்ட் செய்யும் காஜால் அகர்வால்

நயன்தாராவிற்கு நெருக்கடி கொடுக்கும் அமலா பால்... சப்போர்ட் செய்யும் காஜால் அகர்வால்

நயன்தாராவிற்கு நெருக்கடி கொடுக்கும் அமலா பால்... சப்போர்ட் செய்யும் காஜால் அகர்வால்

நடிகை அமலாபால் சோலோ ஹீரோயினாக நடிக்கவிருக்கும் அதோ அந்த பறவை போல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தமிழ் படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் மிகக்குறைவாகவே உள்ளது. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டராக இருக்கும் நயன்நாதராவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நயன்தாராவிற்கு போட்டியாக நடிகை அமலாபால் உருவெடுத்து வருகிறார்.அமலாபால் தற்போது செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் 'அதோ அந்த பறவை போல' படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க உள்ளார்  .இதற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று(மார்ச் 8) வெளியானது.அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருந்தார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜே.ஆர். ஜான் ஆபரகாமும், கலை பணிகளை சரவணனும் மேற்கொள்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.