மீண்டும் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் !

share on:
Classic

தமிழ் தாம் தூம் படத்தின் மூலம் மிக பிரபலமானவர் கங்கனா ரணாவத். அதன்பின் குயின் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிக பெரிய புகழ் பெற்றவராக மாறினார். இப்பொழுது இவர் சோலோ ஹீரோயினாக நடித்துவருகிறார், 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

கங்கனா ரணாடவத் நடிப்பில் இப்பொழுது உருவாக்கி வரும் படம் தான் மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்சி. இந்த படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார். இதில் ராணி லட்சுமிபாயாக நடிக்கிறார்.

தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு திரைப்படத்தை இயக்கியவர், அஸ்வினி ஐயர் திவாரி. இவர் அடுத்து பெண்கள் கபடியை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள இருக்கிறார் கங்கனா. கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. இந்தியில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வரிசையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
 

News Counter: 
100
Loading...

Parkavi