கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு...

Classic

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் 1 மணி நிலவரப்படி 37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜெயநகர் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததாலும் மற்றும் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டதாலும் அந்த இரு தொகுதிகளுக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 57,909 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் 1 மணி நிலவரப்படி 37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் என சுமார் 5 கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 15ஆம் நடைபெறவுள்ளது.

News Counter: 
150

aravindh