சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு வலுக்கிறது எதிர்ப்பு

share on:
Classic

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு நாளுக்குநாள் எதிர்ப்பு  வலுத்துவரும் நிலையில், ஐயப்பன் கோவிலை நோக்கிச் செல்லும் பெண் பக்தர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் சபரிமலைக்குவர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சபரிமலைகோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி பெண்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது எனக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையின் பாரம்பரியம் காக்கவேண்டும் எனக்கூறி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பதினம்திட்டா, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையினர் முழு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இந்நிலையில் மாதவி என்ற ஆசிரியர் தனது குடும்பத்தினருடன் சபரிமலைக்கு பாத யாத்திரையாக சென்றார். அவரை கோவிலுக்கு வர வேண்டாம் எனக் கூறி போராட்டக்காரர்கள், அந்த பெண் பக்தரின் காலில் விழுந்து வேண்டினர். இதனையடுத்து அவர், தனது குடும்பத்தினருடன் சபரிமலை செல்லாமல் பாதியில் திரும்பினார். 

இதனையடுத்து, நிலக்கல்லில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth